புதுவை துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
ஏற்கெனவே கடந்த மாதம் 16-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில்


புதுவை துறைமுகத்தில் கடந்த 21 நாட்களில் நான்காம் முறையாக 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கடந்த மாதம் 16-ஆம் தேதி வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் நல்ல மழை பெய்தது. அதையடுத்து வங்கக்கடலில் மீண்டும் புயல் சின்னம் உருவாகி ஹெலன் புயல் கடந்தது. இதில் புதுச்சேரி பிராந்தியத்திலுள்ள ஏனாம் பகுதி கடும் சேதமடைந்தது. அதையடுத்து லெகர் புயல் அந்தமான் அருகே உருவாகியது. இந்த மூன்று புயல்களாலும் புதுச்சேரியில் நல்ல மழை பொழிவு இருந்தது. 3முறையும் 2ன் எண் புயல் கூண்டு ஏற்பட்டது.
தற்போது கடந்த 21 நாட்களில் நான்காவது முறையாக 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு புதுச்சேரி துறைமுகத்தில் ஏற்றப்பட்டுள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. மாதி என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.புதுச்சேரியில் சனிக்கிழமை காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வெள்ளிக்கிழமை முதல் எண் கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. கடல் சீற்றம் அதிகரித்து, காற்றும் பலமாக வீசத்தொடங்கியது. சனிக்கிழமை 2ம் எண் கூண்டு ஏற்றப்பட்டது.இதனால் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் முதல் சாரல் மழையும் பெய்யத்தொடங்கியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...